செய்திகள்
கலெக்டர் கண்ணன்

350 ரேஷன் கடைகளுக்கு பயோமெட்ரிக் கருவி - கலெக்டர் வழங்கினார்

Published On 2020-10-09 02:10 GMT   |   Update On 2020-10-09 02:10 GMT
விருதுநகர் மாவட்டத்தில் 3 தாலுகாக்களில் உள்ள 350 ரேஷன் கடைகளுக்கு பயோ மெட்ரிக் கருவிகளை கலெக்டர் கண்ணன் வழங்கினார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் 961 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் கருவி மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் கட்டமாக விருதுநகர் தாலுகாவில் 109 ரேஷன் கடைகளுக்கும், சிவகாசி தாலுகாவில் உள்ள 147 ரேஷன் கடைகளுக்கும், திருச்சுழி தாலுகாவில் உள்ள 94 ரேஷன் கடைகளுக்கும் ஆக மொத்தம் 350 ரேஷன் கடைகளுக்கு பயோ மெட்ரிக் கருவிகளை கலெக்டர் கண்ணன் வழங்கினார்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட கடைகளில் ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் சென்று அவர்களது கைரேகையை பதிவு செய்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறு கைரேகை பதிவை பயோ மெட்ரிக் கருவியில் பதிவு செய்ய இயலாத நிலையில் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் அல்லது குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள செல் போன் வழியாக குறிப்பிட்ட நேரத்திற்கு பயன்பாட்டில் கொள்ளும் ஒரு முறை கடவுச் சொல் ஆகியவற்றை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி மங்கல ராமசுப்பிரமணியன், வழங்கல் அலுவலர் கல்யாண் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News