செய்திகள்
கோப்புபடம்

பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-03 13:49 GMT   |   Update On 2020-10-03 13:49 GMT
திருப்பூர் அருகே பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:

உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முதுகெலும்பு உடைக்கப்பட்டும், நாக்கு அறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும். அந்த பெண்ணின் சடலத்தை கூட குடும்பத்தாரிடம் ஒப்படைக்காத பா.ஜனதா அரசின் அராஜகத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நகர தலைவர் பாலு தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளார் குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பவித்ரா, திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் முகில்ராசு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Tags:    

Similar News