செய்திகள்
டிஸ்மிஸ்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஊழியர் டிஸ்மிஸ்

Published On 2020-10-03 07:15 GMT   |   Update On 2020-10-03 07:15 GMT
போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
நாமக்கல்:

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தலைமை கணக்காளராக பணியாற்றி வந்தவர் பெரியசாமி (வயது 54). 10-ம் வகுப்பு வரை படித்த இவர் பிளஸ்-2-ல் தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழை கொடுத்து பணியல் சேர்ந்ததாக புகார் எழுந்தது.

தொடக்கத்தில் கடைநிலை ஊழியராக இருந்த இவர் பின்னர் பதவி உயர்வு மூலம் தலைமை கணக்காளராக உயர்ந்தார். இதற்கிடையே பெரியசாமியின் பணி பதிவேட்டினை ஆய்வு செய்த போது அதில் பிளஸ்-2 சான்றிதழ் நகல் கிழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பெரியசாமி பதவி இறக்கம் செய்யப்பட்டு நரசிம்மர் கோவிலில் தரிசன சீட்டு வழங்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அதன் பின் ஆதாரங்களின் அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கிடையே அரசு தேர்வுகள் இயக்குனரகத்துக்கு கோவில் உதவி ஆணையர் கடிதம் எழுதி பெரியசாமியின் பிளஸ்-2 சான்றிதழ் குறித்து விசாரித்ததில் அது போலி என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெரியசாமி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் ரமேஷ் கூறியதாவது:-

பிளஸ்-2 படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து பெரியசாமி பணியில் சேர்ந்தார். இது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News