செய்திகள்
அரவக்குறிச்சி மற்றும் கரூர் திருமாநிலையூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-01 11:00 GMT   |   Update On 2020-10-01 11:00 GMT
கரூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்:

கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யூ. மத்திய சங்க துணை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எல்.பி.எப். கிளை செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. பொது செயலாளர் செல்வராஜ், டி.டி.எஸ்.எப். மாநில தலைவர் ஷாஜகான், எல்.பி.எப். மாவட்ட துணை கவுன்சில் பாலன் உள்பட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்

போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்க கூடாது. அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும். குறைந்த பயணிகளுடன் பஸ் இயக்கப்படுவதால் ஏற்படும் இழப்பை முழுமையாக அரசு ஈடுகட்ட வேண்டும். போக்குவரத்து கழகங்களுக்கு உரியநிதி வழங்க வேண்டும். நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

பஸ்கள் குறைவாக இயக்கப்படுவதை காரணம் காட்டி அலவன்ஸ், பேட்டா ஆகியவற்றை குறைக்க கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அரவக்குறிச்சி அரசு போக்குவரத்துப்பணிமனை முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில சம்மேளன நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தில்குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

குளித்தலை அருகே மனத்தட்டையில் உள்ள அரசு பணிமனை முன்பு நேற்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 6 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரை சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News