செய்திகள்
சஸ்பெண்டு

விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்ச வழக்கில் கைதான 2 அலுவலர்கள் சஸ்பெண்டு

Published On 2020-09-29 07:52 GMT   |   Update On 2020-09-29 07:52 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்ச வழக்கில் கைதான 2 அலுவலர்கள் மீதும் அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன் பேரில் 2 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன் (வயது 33). இவர் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு விவசாய பம்புசெட்டுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.27 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். இதையடுத்து லஞ்சஒழிப்பு போலீசாரால் புருஷோத்தமன் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு அலுவலராக பணிபுரிந்து வந்தவர் ஜெயவேல் (40). இவர் விழுப்புரத்தை சேர்ந்த ஒருவரிடம் வீடு கட்டுவதற்கு நகர வடிவமைப்பு அனுமதி வழங்குவதற்காக ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். இதனைத்தொடர்ந்து அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கைதான 2 பேர் மீதும் அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன் பேரில் 2 பேரும் சஸ்பென்டு செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News