செய்திகள்
வழக்கு பதிவு

முககவசம் அணியாத 397 பேர் மீது வழக்கு

Published On 2020-09-28 07:27 GMT   |   Update On 2020-09-28 07:27 GMT
முககவசம் அணியாமல் வந்த 397 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.79 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த முககவசம் அணியாதவர்கள், பொது இடத்தில் எச்சில் துப்புபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று போலீஸ் அதிகாரிகள் நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறையினருடன் இணைந்து அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வகையில் முககவசம் அணியாமல் வந்த 397 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.79 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல் பொது இடங்களில் எச்சில் துப்பியதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News