செய்திகள்
எஸ்பி பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பி. உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் மரியாதை

Published On 2020-09-26 06:09 GMT   |   Update On 2020-09-26 06:09 GMT
ஆந்திர அரசு சார்பில் அம்மாநில மந்திரி அனில் குமார் யாதவ் நேரில் சென்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணி யம் 1946-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கொண்டாம்பேட்டையில் சாம்பமூர்த்தி-சகுந்தலம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.

1966-ம் ஆண்டு முதன் முறையாக ஒரு தெலுங்கு திரைப்படத்தில் பாடினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை படைத்தவர்.

தென்னிந்திய மொழி களில் அவர் அதிக பாடல் களை பாடி உள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணி யம் பூர்வீகம் ஆந்திரா என்ப தால் அவரது உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இன்று காலை தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

ஆந்திர அரசு சார்பில் அம்மாநில மந்திரி அனில் குமார் யாதவ் நேரில் சென்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் திருப்பதி எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டியும் இன்று காலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

Similar News