செய்திகள்
மல்லிகை

திருமங்கலம் பகுதியில் மல்லிகை, முல்லை பூக்கள் விலை கடும் வீழ்ச்சி

Published On 2020-09-24 08:39 GMT   |   Update On 2020-09-24 08:39 GMT
திருமங்கலம் பகுதியில் தற்போது சுபநிகழ்ச்சிகள், கோவில்கள் திருவிழா நடைபெறாததால் மல்லிகை, முல்லை பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்தள்ளது.

திருமங்கலம்:

திருமங்கலம் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதியில் 30000 முதல் 40000 விவசாயிகள் மல்லிகைப்பூ முல்லைப்பூ பிச்சி பூ ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். தண்ணீரின் பற்றாக் குறையால் மல்லிகை பூக்கள் அதிகம் பயிரிட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

திருமங்கலம் அருகே உள்ள அரசபட்டி, வலையங் குளம்,தூம்பக்குளம், கப்பலூர், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதி என பல்வேறு பகுதிகளில் லட்சத் திற்க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை பூ பிச்சிப் பூ முல்லைப் பூக்களை பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 30 முதல் 50 ரூபாய் வரை மார்க்கெட்டில் விலை போகிறது என்றும் தற்போது சுபநிகழ்ச்சிகள் கோவில்கள் திருவிழா நடைபெறவில்லை.

இதனால் தோட்டங்களில் பூப்பறிக்கும் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 50 வரை கூலி வழங்கப் படுகிறது பூக்களின் விலை வீழ்ச்சியால் கூலி கொடுக்க முடியாத நிலையில் தோட்டத்தில் உள்ள செடிகளிலேயே பூக்கள் பறிக்க படாமல் மலர்ந்து உதிர்ந்து விடுகிறது.

ஏக்கருக்கு லட்சக் கணக்கான ரூபாய் செலவழித்து வரும் விவசாயிகள் கடனாளியாக பெரும் வேதனை அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் வேறு வழியின்றி பூக்களை பறித்து கமி‌ஷன் கடைகளுக்கு கொண்டு வந்தால் கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விலைக்கு எடுக்கப்படுகிறது. மேலும் வாசனை திரவிய ஆலைகளுக்கு அளவுக் கதிகமான அளவிற்கு பூக்கள் வருவதால் மல்லி கைப் பூக்களை எடுக்க மறுக்கின்றனர்.

இதனால் பறிக்கப்பட்ட பூக்களும் குப்பைகளில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு அரசு பூக்களுக்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். மேலும் திருமங்கலம் சுற்று வட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மல்லிகை செடி பயிரிட்டு உள்ளதால் இப்பகுதியில் வாசனை திரவிய ஆலை அமைந்தால் பூக்களுக்கு விலை நிர்ணயம் கிடைக்கும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News