செய்திகள்
கலெக்டர் திவ்யதர்ஷினி

கலவை தாலுகாவில் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு

Published On 2020-09-20 10:33 GMT   |   Update On 2020-09-20 10:33 GMT
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
கலவை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கலவை தாலுகாவில் உள்ள தோணிமேடு, வேம்பி, குண்டலேரி, பாரிமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் ‘ஜல் ஜீவன் மிஷின்’ திட்டத்தின் கீழ் வீட்டு வரி கோப்பு, குடிநீர் குழாய் கோப்பு பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கவும், குடிநீர் நிலுவைத் தொகையை உடனே வசூல் செய்யவும் உத்தரவிட்டார்.

மேலும் குப்பிடிசாத்தம், குண்டேரி, மருதமங்கலம் ஆகிய கிராமங்களில் பட்டா வழங்குவதற்கான இடத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கலவை தாசில்தார் ரவி, மண்டல துணை தாசில்தார் ராஜலட்சுமி, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், சித்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News