செய்திகள்
ராம்குமார்

ராம்குமார் தற்கொலை விவகாரம்- புழல் சிறை அதிகாரிகளுக்கு சம்மன்

Published On 2020-09-11 09:50 GMT   |   Update On 2020-09-11 09:50 GMT
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் தற்கொலை பற்றி விளக்கம் அளிக்க புழல் சிறை அதிகாரிகளுக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை:

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி, கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

சுவாதியை கொலை செய்ததாக நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ராம்குமார் சிறையில் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.  ராம்குமார் தற்கொலை செய்தது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ராம்குமார் தற்கொலை பற்றி விளக்கம் தர புழல் சிறை அதிகாரிகளுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

செப்.30ந் தேதி நேரில் ஆஜராகும்படி புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் உள்பட 6 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News