செய்திகள்
கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிடங்களை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு செய்த காட்சி.

திருப்பத்தூரில் ரூ.18 கோடியில் கட்டப்படும் மருத்துவமனை கட்டிடங்கள்- கலெக்டர் சிவன்அருள் ஆய்வு

Published On 2020-09-06 10:06 GMT   |   Update On 2020-09-06 10:06 GMT
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடி செலவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடி செலவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடத்தின் தரம், சிமெண்டு கலவை, செய்ய வேண்டிய மின்வயரிங் பணிகள் குறித்தும், 6 மாடி கட்டிட பணிகளை பார்வையிட்டும் கலெக்டர் சிவன் அருள் ஆய்வு செய்தார்.

அப்போது நிருபர்களிடம் கலெக்டர் கூறுகையில், “தமிழக அரசு பொதுப்பணித்துறை மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடி செலவில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தற்பொது தரைத்தளம் மற்றும் முதல் தளம் பணிகள் முடிவடைந்துள்ளது. அதில் எலக்ட்ரிக்கல் வேலை மட்டும் பாக்கி உள்ளது. இதை உடனடியாக முடித்து கொடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ஆய்வின்போது அரசு மருத்துவமனை டாக்டர்கள் பி.பிரபாகரன், கே.டி.சிவகுமார் மற்றும் ஆர்.ஆறுமுகம், எஸ்.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News