செய்திகள்
மருத்துவ முகாம்

தாராபுரத்தில் 180 பேருக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2020-09-05 14:20 GMT   |   Update On 2020-09-05 14:20 GMT
தாராபுரத்தில் 180 பேர்களிடம் சளி, ரத்த மாதிரிகள் மாதிரிகளை சேகரித்து கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தாராபுரம்:

தாராபுரத்தில் சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நகரமாக உள்ளது. இதனால் சுகாதார துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்வது பெரும் சவாலாக இருந்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில் நகரமான தாராபுரத்திற்கு வெளியூரிலிருந்து வரும் புதிய நபர்களால் கொரோனா வைரஸ் உருவாகி வருவதாக தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் பரிசோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஆணுக்கும், என்.ஆர்.எஸ்.நகரை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணுக்கும், 58, வயதுடைய ஆண் ஆகிய 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனிமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் இவர்களுடன் தொடர்புடைய 180 பேர்களிடம் சளி, ரத்த மாதிரிகள் மாதிரிகளை நேற்று சேகரித்து கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Tags:    

Similar News