செய்திகள்
கோப்புபடம்

முழு ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை

Published On 2020-08-31 09:44 GMT   |   Update On 2020-08-31 09:44 GMT
சேலத்தில், முழு ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.
சேலம்:

கொரோனா பரவலை தடுப்பதற்காக நேற்று சேலம் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக ஏராளமானவர்கள் மோட்டார்சைக்கிள், மொபட்களில் வந்தனர். 

அவ்வாறு வந்த 50-க்கும் மேற்பட்டவர்களை நிறுத்தி அவர்கள் அனைவரையும் அங்கேயே 1 மணி நேரம் நிற்க வைத்து நூதன தண்டனை வழங்கினர். அதன்பிறகு அவர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News