செய்திகள்
கேஎஸ் அழகிரி

பீலா ராஜேஷின் தந்தை காலமானார்- கேஎஸ் அழகிரி இரங்கல்

Published On 2020-08-23 12:22 GMT   |   Update On 2020-08-23 12:22 GMT
வணிக வரித்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான வெங்கடேசன் மறைவுக்கு கேஎஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும், இன்று பிற்பகல் எல்.என்.வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர்.

முன்னாள் எம்எல்ஏ ராணியின் கணவரும், முன்னாள் டிஜிபியுமான வெங்கடேசன் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எல்.என் வெங்கடேசன் காவல்துறையில் உயர் பொறுப்புகளை பெற்று சிறப்பாக செயல்பட்டவர். முன்னாள் டிஜிபி வெங்கடேசன் காவல்துறையினருக்கு முன்மாதிரியாக விளங்கியவர் என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News