செய்திகள்
கோப்புபடம்

தலைமை அலுவலகம் குறித்து அவதூறு - இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-19 10:09 GMT   |   Update On 2020-08-19 10:09 GMT
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகம் குறித்து முகநூலில் அவதூறு பரப்புவோரை கைது செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பலமுறை புகார் மனு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுபோல் புதிய பஸ் நிலையம் பகுதியில் மண்டல செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும், 1-வது மண்டல பகுதியில் மண்டல செயலாளர் செல்வராஜ் தலைமையிலும், நல்லூரில் மண்டல செயலாளர் செந்தில்குமார் தலைமையிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் நடராஜன், சதாம்உசேன், மோகனபாரதி, சசிகலா கோபால், சண்முகம், மூர்த்தி, நடராஜ், சின்னசாமி, ராஜமாணிக்கம், விஜயா, முனியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கைகளில் கொடிகளை ஏந்தியபடி கலந்துகொண்டனர்.

அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அவினாசி ஒன்றிய செயலாளர் இசாக் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய துணை செயலாளர் கோபால் மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, தனிஸ்லாஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் ஷாஜஹான், நகரகிளை பொருளாளர் முகமதுயாசின் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் இதுபோல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News