செய்திகள்
ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-15 14:58 GMT   |   Update On 2020-08-15 14:58 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:

மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் இ-பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மோட்டார் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும். சாலை வரியை வருகிற டிசம்பர் மாதம் வரை ரத்து செய்ய வேண்டும். வாகன கடனுக்கு வட்டி, அபராத வட்டி வசூலிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அனிபா, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணி, செயல் தலைவர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர், மாவட்ட துணை செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு குடைபிடித்து சமூக இடைவெளியுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Tags:    

Similar News