செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

பவானிசாகர் அணையை 14ந்தேதி முதல் திறக்க முதலமைச்சர் உத்தரவு

Published On 2020-08-12 04:04 GMT   |   Update On 2020-08-12 04:04 GMT
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து ஆக.14ந்தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையில் தற்போது 101.10 அடி நீர் உள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து ஆக.14ந்தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். 120 நாட்களுக்கு திறக்கப்படும் 23,846,40 மில்லியன் கனஅடி நீரால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பவானிசாகர் அணையில் நீர் திறக்கப்படுவதால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News