செய்திகள்
கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 89 பேருக்கு கொரோனா

Published On 2020-08-11 06:38 GMT   |   Update On 2020-08-11 06:38 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 620 ஆக உயர்ந்தது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்வோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சோப்பு போட்டு நன்றாக கைகளை கழுவ வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கி வருகிறது.

இருப்பினும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 4,531 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 89 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் விழுப்புரம் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர் ஒருவரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களை சேர்ந்த 87 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 620 ஆக உயர்ந்தது. மேலும் 43 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
Tags:    

Similar News