செய்திகள்
எம்பி வசந்தகுமார்

நதிநீர் இணைப்பு திட்டத்தின் 4ம் கட்ட பணிக்கு நிதி ஒதுக்கீடு- முதலமைச்சருக்கு எம்பி வசந்தகுமார் நன்றி

Published On 2020-08-08 08:55 GMT   |   Update On 2020-08-08 08:55 GMT
நதிநீர் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் எம்பி வசந்தகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:

மத்திய அரசின் நீர்வளத்துறை மற்றும் ஆறுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் 2009 ஆம் ஆண்டு ரூ.369 கோடி மொத்த மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், மழைக்காலங்களில் தாமிரபரணியில் வீணாகி கடலில் கலக்கும் 13 ஆயிரத்து 800 மில்லியன் கனஅடி நீரை திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகளுக்கு கால்வாய் மூலம் திருப்பிவிடும்.

இந்த திட்டம் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு கால்வாய் பணிகள் நடைபெற்று வந்தன. இதுவரை மூன்று கட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து கொரோனா காலத்திலும் தாமிரபரணி வெள்ளநீர் திட்ட பணிகள் தடைபடக்கூடாது என்பதற்காக நான்காம் கட்ட பணிகளுக்காக தமிழக அரசு 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில் நதிநீர் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் எம்பி வசந்தகுமார் நன்றி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், தனிப்பட்ட முறையில் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். 
Tags:    

Similar News