செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் பகல் நேர பராமரிப்பு மையத்தில் பழுதடைந்த கட்டிடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

மாற்றுத்திறனாளிகள் பகல் நேர பராமரிப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு

Published On 2020-08-01 12:44 GMT   |   Update On 2020-08-01 12:44 GMT
மாற்றுத்திறனாளிகள் பகல் நேர பராமரிப்பு மையத்தில் பழுதடைந்த கட்டிடத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேட்டவலம்:

வேட்டவலம் திருக்கோவிலூர் ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (தெற்கு) வளாகத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளிகள் பகல் நேர பராமரிப்பு மையத்தில் பழுதடைந்த கட்டிடத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து ஆவூர் கிராமத்தில் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டார்.

அப்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருள்செல்வம், மாவட்ட உதவி திட்ட அலுவலர் விஜயன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆனந்தன், கீழ்பென்னாத்தூர் தாசில்தார் ராம்பிரபு, கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகாதேவன், பழனி, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஸ்ரீராமுலு, வேட்டவலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி, தலைமை ஆசிரியர் சாந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், உதவி ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News