செய்திகள்
தீபாராம்

30 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர் கைது

Published On 2020-08-01 10:31 GMT   |   Update On 2020-08-01 10:31 GMT
திருப்பூரில் 30 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டியை அடுத்த அம்மன்நகரில் ஜே.பவானி ஸ்டோர் என்ற கடையின் பின்புறம் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை நடைபெறுவதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் போலீசார்சம்பந்தப்பட்ட கடை மற்றும் கடையின் பின்புறம் உள்ள அறையில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது கடையின் பின்புறம் உள்ள அறையில் 2 மூட்டைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அங்கு புகையிலை பொருட்களை மொத்தமாக பதுக்கி வைத்து, சிறிய கடை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கடை உரிமையாளரான ராஜஸ்தான்மாநிலத்தை சேர்ந்த தீபாராம் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 30 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News