செய்திகள்
ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-29 12:11 GMT   |   Update On 2020-07-29 12:11 GMT
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி:

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா நோய் தொற்று காலம் முழுமைக்கும் விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும். நுண் நிதி நிறுவன கடன்களை அரசே ஏற்று தள்ளுபடி செய்யவேண்டும். 60 வயது நிறைவடைந்த முதியோர் அனைவருக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 

100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயர்த்தி தினக்கூலி ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் கணபதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமமூர்த்தி, லெனின்குமார், தமிழ்செல்வன், மாடசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News