செய்திகள்
அரசுத் தேர்வுகள் இயக்ககம்

பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளை முதல் மதிப்பெண் பட்டியல்

Published On 2020-07-23 07:33 GMT   |   Update On 2020-07-23 07:33 GMT
பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் நாளை முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

அரசு தேர்வுத்துறை இயக்குனர் (முழுக்கூடுதல் பொறுப்பு) மு.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பிளஸ்-2 பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 24-ந்தேதி (நாளை) முதல் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பதிவுசெய்ய விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்.

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் பாடங்களுக்கு தற்போது மறுகூட்டலோ, மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்கக்கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் நகல் தேவையில்லை எனில், மாணவர் விரும்பினால் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 அரியர் தேர்வு எழுதியவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்களை சரிபார்த்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வருகிற 24-ந்தேதி (நாளை) முதல் 30-ந்தேதி வரை மாணவர்களுக்கு வினியோகிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்கு அவர் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News