செய்திகள்
நடமாடும் மருத்துவமனை

கொரோனா பாதிப்பை கண்டறிய நடமாடும் மருத்துவமனை வாகனங்கள்

Published On 2020-07-18 07:11 GMT   |   Update On 2020-07-18 07:11 GMT
சிவகாசி தாலுகா பகுதியில் கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக தொண்டு அமைப்புகள் சார்பில் 3 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி:

சிவகாசி தாலுகா பகுதியில் கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக தொண்டு அமைப்புகள் சார்பில் 3 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலம் மருத்துவக்குழுவினர் நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்வார்கள். இதன் தொடக்க விழா அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவமனையை தொடங்கி வைத்தார்.

இதில் பட்டாசு ஆலை அதிபர்கள் காளஸ்வரி ஏ.பி.செல்வராஜன், அரசன் அசோகன், தொழில் அதிபர் ஆனந்த்சிங்வி, சிவகாசி நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, திருத்தங்கல் நகராட்சி பொறுப்பு கமிஷனர் பாண்டித்தாய், சிவகாசி நகராட்சி சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, மேலாளர் முத்துசெல்வம், வருவாய் ஆய்வாளர் சரவணன், அபுபக்கர்சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசி நகராட்சி, திருத்தங்கல் நகராட்சி, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு என தனித்தனியாக இந்த நடமாடும் மருத்துவமனை செல்கிறது.

இந்த வாகனத்தில் ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதார பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் இருப்பார்கள். தினமும் 150 பேருக்கு இந்த குழுவினர் பரிசோதனை செய்வார்கள். இதில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News