செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்துள்ளனர்... மாவட்ட வாரியாக நிலவரம்

Published On 2020-07-15 15:46 GMT   |   Update On 2020-07-15 15:46 GMT
தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.
சென்னை:

தமிழகத்தில் இன்று மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ல் இருந்து 1,02,310 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது. 46வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

சென்னையில் இன்று 1,291 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் இதுவரை 1,318 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

இன்று மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை:

    அரியலூர் 1
    செங்கல்பட்டு 604
    சென்னை- 1484
    கோவை- 68
    கடலூர்- 10
    தருமபுரி- 2
    திண்டுக்கல் - 0
    ஈரோடு -3
    கள்ளக்குறிச்சி- 147
    காஞ்சிபுரம் - 433
    கன்னியாகுமரி - 43
    கரூர்- 5
    கிருஷ்ணகிரி- 1
    மதுரை- 1188
    நாகப்பட்டினம் - 12
    நாமக்கல் - 41
    நீலகிரி - 0
    பெரம்பலூர்- 0
    புதுக்கோட்டை- 49
    ராமநாதபுரம்- 32
    ராணிப்பேட்டை- 118
    சேலம் -31
    சிவகங்கை - 27
    தென்காசி -0
    தஞ்சாவூர்- 17
    தேனி- 40
    திருப்பத்தூர்- 0
    திருவள்ளூர்- 181
    திருவண்ணாமலை- 100
    திருவாரூர் -1
    தூத்துக்குடி- 7
    நெல்லை- 33
    திருப்பூர்- 1
    திருச்சி -56
    வேலூர்- 189
    விழுப்புரம்- 43
    விருதுநகர்- 21
Tags:    

Similar News