செய்திகள்
கண்டெடுக்கப்பட்ட பழமையான சாமி சிலை

பனவடலிசத்திரம் அருகே பழமையான சாமி சிலை கண்டெடுப்பு

Published On 2020-07-05 10:01 GMT   |   Update On 2020-07-05 10:01 GMT
பனவடலிசத்திரம் அருகே பூமியை தோண்டும்போது பழமையான சாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
பனவடலிசத்திரம்:

வீரகேரளம்புதூர் தாலுகா மருக்காலங்குளம் பஞ்சாயத்து சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் மருக்காலங்குளம், தங்கம்மாள்புரம், சீவலசமுத்திரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் ஊத்துமலை வனசரகப்பகுதியில் 100 நாள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சீவலசமுத்திரம் ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் ஓடைபராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது பூமியை தோண்டும்போது பழமையான சாமி சிலை ஒன்று கிடைத்தது.

அந்த சிலையின் தலைப்பகுதி மட்டும் இருந்தது. இந்த சிலை மிகவும் பழமையான சிலை போல் இருந்தது. பொதுமக்கள் பழமையான சிலையை ஆச்சரியமாக பார்த்துச் சென்றனர். மேலும் சிலர் அதற்கு சிறு மேடை அமைத்து எலுமிச்சை இளநீர் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News