செய்திகள்
தற்கொலை

திருப்பூரில் விஷமாத்திரை தின்று விவசாயி தற்கொலை

Published On 2020-07-05 09:30 GMT   |   Update On 2020-07-05 09:30 GMT
திருப்பூரில் வங்கி ஊழியர்கள் கடனை கேட்டு நெருக்கடி தந்ததால் மனஉளைச்சலில் விஷமாத்திரை தின்று விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் குண்டடம் குழந்தைபாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி(வயது 55). விவசாயி. இவர் தாராபுரத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.11 லட்சம் விவசாய கடன் பெற்றிருந்தார். அவர் வங்கிக்கு தவணை தொகையை முறையாக செலுத்தி வந்தவர், பின்னர் வறட்சி காரணமாக விளைச்சல் சரிவர இல்லாததால் தவணைத்தொகையை கட்ட முடியாமல் சிரமப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் வங்கியின் கடன் வசூல் அலுவலர்கள் விவசாயி ராஜாமணியின் வீட்டிற்கே சென்று கடன் தொகையை கட்டச்சொல்லி வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த ராஜாமணி, நேற்று காலை தோட்டத்தில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் விஷ மாத்திரையை எடுத்து சாப்பிட்டு தோட்டத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
Tags:    

Similar News