செய்திகள்
தங்கம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.496 குறைவு: ஒரு பவுன் ரூ.36,976-க்கு விற்பனை

Published On 2020-07-03 04:01 GMT   |   Update On 2020-07-03 04:01 GMT
தங்கம் கிராமுக்கு ரூ.62-ம், பவுனுக்கு ரூ.496-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 622-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 976-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை :

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, கடந்த மாதம் (ஜூன்) 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உயர்வை சந்தித்தது. அதன் பின்னர் ஏற்ற, இறக்கத்துடன் தங்கம் விலை காணப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.424 அதிகரித்து தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில், நேற்று விலை குறைந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 684-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 472-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.62-ம், பவுனுக்கு ரூ.496-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 622-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 976-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சரிந்து இருந்தது. கிராமுக்கு 1 ரூபாய் 80 காசும், கிலோவுக்கு ரூ.1,800-ம் குறைந்து, ஒரு கிராம் 52 ரூபாய் 90 காசுக்கும், ஒரு கிலோ ரூ.52 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆனது.
Tags:    

Similar News