செய்திகள்
ஓ. ராஜா

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா

Published On 2020-06-29 11:05 GMT   |   Update On 2020-06-29 11:05 GMT
தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா. இவர் தேனி மாவட்ட ஆவின் தலைவராக பதவி வகிக்கிறார்.

இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் தனியார் மருத்துவமனை கட்டுப்பாட்டிலுள்ள விடுதியில் தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News