செய்திகள்
பஞ்சுமில் தீப்பிடித்து எரிந்தகாட்சி.

திருப்பூர் அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து - ரூ. 1 கோடி பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2020-06-27 08:03 GMT   |   Update On 2020-06-27 08:03 GMT
திருப்பூர் அருகே பஞ்சுமில்லில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரூ.1கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
நல்லூர்:

கரூரை சேர்ந்த அப்துல் அமீது மகன் அப்துல் காதர். இவர் திருப்பூர் அமர்ஜோதி கார்டன் 3 வது கிராஸ்கட் வீதியில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பஞ்சுமில் காசிபாளையம், சிட்கோ செல்லும் வழியில் உள்ளது. பனியன் துணிககளின் வேஸ் துணியை வாங்கி அதனை அரைத்து பஞ்சாக்கி விற்பனை செய்து வருகிறார்.

அந்த மில்லில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் மின்கசிவு காரணமாக அந்த மில்லில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் பஞ்சில் பற்றிய தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் ஊரக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைஅலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வானங்களில் வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் குடோன் முழுவதும் பரவியது. இதனால் குடோன் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. அதை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட லாரி தண்ணீர் வரவழைக்கப்பட்டு 6 மணிநேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.

இதனால் அவ்வழியாக போக்குவரத்து போலீசார் தடுப்பு அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கட்டிங் துணி மற்றும் பஞ்சு தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் நவீன் குமார், தெற்கு தாசில்தார் சுந்தரம், ஊரக இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி, வருவாய் அலுவலர் சிவசக்தி உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். 
Tags:    

Similar News