செய்திகள்
டிஜிபி திரிபாதி

விசாரணைக் காவலில் கைதிகளை விசாரிக்கும்போது எச்சரிக்கை தேவை- டிஜிபி சுற்றறிக்கை

Published On 2020-06-25 03:24 GMT   |   Update On 2020-06-25 03:24 GMT
விசாரணைக் காவலில் கைதிகளை விசாரிக்கும்போது காவல்துறையினர் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
சென்னை:

விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருந்த சாத்தான்குளம் தந்தை மகன், மரணம் மற்றும் போலீசார் பலருக்கு கொரோனா பரவி வரும்  நிலையில், தமிழக டிஜிபி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 

அதில், விசாரணைக் காவலில் கைதிகளை விசாரிக்கும்போது காவல்துறையினர் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

விசாரணைக் காவலில் வைக்கப்படுவோரின் பலருக்கு கொரோனா கண்டறியப்படுவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த தனி கட்டிடம் ஏற்படுத்தவேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News