செய்திகள்
ஒகேனக்கல்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,800 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2020-06-23 10:18 GMT   |   Update On 2020-06-23 10:18 GMT
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2,800 கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1,500 கன அடியாக இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2,800 கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கடந்த 15 நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று கூடுவதும், பின்னர் குறைவதும் வழக்கமாக உள்ளது.

காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி தமிழகத்திற்கு மாத வாரியாக கர்நாடகம் திறக்க வேண்டிய தண்ணீரை வழங்க கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பெய்த மழை காரணமாகவும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News