செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

Published On 2020-06-19 14:52 GMT   |   Update On 2020-06-19 14:52 GMT
பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர் ஏ.எல்.ராகவன். 1950-களில் இருந்து 1970 வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம் ஆவார்.

 ஏ.எல்.ராகவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார்.

ஏ.எல்.ராகவன் சி.ஆர். சுப்புராமன், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, எஸ்.எம். சுப்பையா நாயுடு உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார்.  இது தவிர்த்து விஜயகுமாரி என்ற படத்தில் குமாரி கமலாவுக்காக சிறுமி குரலிலும் ஏ.எல். ராகவன் பாடியுள்ளார்.  தனது இசை பயணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார்.  அலைகள் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.ராகவனின் மறைவு தமிழ் திரைப்படத்துறைக்கும் இசை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மறைந்தாலும் அவரது பல பாடல்கள் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News