செய்திகள்
மழை

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

Published On 2020-06-18 10:14 GMT   |   Update On 2020-06-18 10:14 GMT
நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 2 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 1 மி.மீட்டரும், நாளை (வெள்ளிக்கிழமை) 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 10 கி.மீ.வேகத்தில் வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 45 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழையின் மிதமான தாக்கத்தால், லேசான மழை மாவட்டத்தின் சில இடங்களில் காணப்படும். காற்றின் வேகம் சற்று அதிகரித்தும், பகல் வெப்பம் உயர்ந்தும் காணப்படும்.

செம்மறியாடுகளை நீலநாக்கு நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த நோய் கிருமி கூலிகாய்ட்ஸ் என்னும் கொசு கடிப்பதன் மூலம் நோயுற்ற ஆடுகளில் இருந்து மற்ற ஆடுகளுக்கு பரவுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் மூக்கில் சளி வருதல், முகம் வீங்கி காணப்படுதல், வாய், உதடு, நாக்கு போன்ற இடங்களில் புண் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே நீலநாக்கு நோய் தடுப்பூசிகளை போட்டு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News