செய்திகள்
கல்லணை

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Published On 2020-06-16 07:47 GMT   |   Update On 2020-06-16 07:47 GMT
தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
தஞ்சை:

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. அதில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். காவிரி, கல்லணை கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கல்லணை திறப்பால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
Tags:    

Similar News