செய்திகள்
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்

எண்ணெய் நிறுவனங்கள் ஏழைகள், அவர்களுக்குப் பணம் வேண்டும் - ப.சிதம்பரம்

Published On 2020-06-08 19:26 GMT   |   Update On 2020-06-08 19:26 GMT
பெட்ரோல் மீதான வரி உயர்வு குறித்து மத்திய அரசை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை:

நாட்டில் கொரோனா தாக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஒரு விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், “பெட்ரோல் மீதுள்ள வரியை உயர்த்துகிறார்கள். ஏனென்றால் மத்திய அரசு ஏழை. அதற்கு வரிப் பணம் வேண்டும்.



இன்று பெட்ரோல் சில்லறை விலையை உயர்த்தினார்கள். ஏனென்றால் எண்ணெய் நிறுவனங்கள் ஏழைகள். அவர்களுக்குப் பணம் வேண்டும்.

ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தாம் பணக்காரர்கள். ஆகவே அவர்கள் என்ன விலை என்றாலும் கொடுப்பார்கள் என்று அரசு நினைக்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் , ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரர்கள். ஆகவே அவர்கள் என்ன விலை என்றாலும் கொடுப்பார்கள் என மத்திய அரசு நினைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Tags:    

Similar News