செய்திகள்
வெண்டைக்காய்

தலைவாசல் மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி

Published On 2020-06-08 10:18 GMT   |   Update On 2020-06-08 10:18 GMT
தலைவாசல் மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தலைவாசல்:

தலைவாசல் பஸ் நிலையம் அருகில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பின்புறம் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. மார்க்கெட்டில் தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளான சிறுவாச்சூர், புத்தூர், ஊனத்தூர், மணிவிழுந்தான், காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் வெண்டைக்காயை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் வெண்டைக்காய் அதிகளவில் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுவதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ ஒரு ரூபாய் என்று சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த கூலிக்கு கூட விற்பனை ஆகவில்லை. அறுவடை செய்த வெண்டைக்காயை மோட்டார் சைக்கிள், மொபட் மூலம் விவசாயிகள் மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிள் பெட்ரோல் செலவுக்கு கூட வெண்டைக்காய் விற்பனை ஆகவில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News