search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெண்டைக்காய் விலை வீழ்ச்சி"

    காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு பகுதிகளில் பூச்சி தாக்குதலால் வெண்டக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்து கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். வெண்டைக்காய் நடவு செய்யப்பட்டு 45 நாட்களில் அறுவடை தரும். அறுவடை மூன்று மாதம் வரை மகசூல் தரும். 

    தற்போது பாலக்கோடு மாரண்டஅள்ளி, வெள்ளிச் சந்தை காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாட்லாம் பட்டி,  அனுமந்தபுரம், பந்தாரஅள்ளி  உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட வெண்டை செடிகளில் வெள்ளை பூச்சி தாக்குதலும் மற்றும் பச்சை புழுக்கள் தாக்குதலும் அதிக அளவு இருப்பதால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பூச்சி தாக்குதல் காரணமாக வெண்டைக்காய் செடிகளிலேயே சுருங்கி காணப்படுகிறது. இதனால் மகசூல் கடுமையாக சரிந்துள்ளது. சென்ற மாதம் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் தற்போது கிலோ 12 ரூபாய் ஆக சரிந்துள்ளது.

    வெண்டைக்காயில் பூச்சி தாக்குதல் குறித்து உரிய மருந்து வகைகளை விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அலுவலர்கள் நேரடியாக சென்று பரிசோதித்து பரிந்துரை செய்ய வேண்டும் என்று காரிமங்கலம் - பாலக்கோடு பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

    வெண்டை மகசூல் குறைவு மற்றும் விலை குறைவு என்பதால் வெண்டை பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்து கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.
    ×