செய்திகள்
பருத்தி

ராசிபுரத்தில் ரூ.40 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Published On 2020-06-02 09:53 GMT   |   Update On 2020-06-02 09:53 GMT
ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 3,580 பருத்தி மூட்டைகள் ரூ.40 லட்சத்துக்கு ஏலம் போனது. விவசாயிகளும், வியாபாரிகளும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.
ராசிபுரம்:

ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று திங்கட்கிழமை முதன் முதலாக ராசிபுரம் அருகே கவுண்டம்பாளையம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் மைதானத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கம் மூலம் இந்த ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், முருங்கப்பட்டி, முத்துக்காளிப்பட்டி, குருசாமிபாளையம், சவுதாபுரம், வையப்பமலை, பட்டணம், வடுகம், ப.மு.பாளையம், தேங்கல்பாளையம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

திருப்பூர், ஆத்தூர், அவினாசி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலத்தில் எடுத்தனர். ஆர்.சி.எச்.ரக பருத்தி 3,348 மூட்டைகளையும், டி.சி.எச்.ரக பருத்தி 232 மூட்டைகளையும் ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் ஆர்.சி.எச்.ரக பருத்தி குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.3,496 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.4,729-க்கும், டி.சி.எச்.ரக பருத்தி குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.3,666 முதல் அதிகபட்சமாக ரூ.4,888-க்கும் ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 3,580 பருத்தி மூட்டைகள் ரூ.40 லட்சத்துக்கு ஏலம் போனது. விவசாயிகளும், வியாபாரிகளும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.
Tags:    

Similar News