செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

செய்யாற்றில் ரூ.5 கோடியில் புதிய தடுப்பணை- எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Published On 2020-05-29 07:45 GMT   |   Update On 2020-05-29 08:47 GMT
ஆரணி அருகே செய்யாற்றில் ரூ.5 கோடியில் புதிய தடுப்பணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தெள்ளுர் ஊராட்சிக்குபட்ட செய்யாற்று ஆற்றில் 145மீட்டர் நீளமும், 1.2மீட்டர் உயரமும் கொண்ட தடுப்பணை கட்ட சுமார் ரூ.5.63 கோடி மதிப்பில் புதிய தடுப்பனை கட்டு பணி முடிவடைந்தது.

இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் ஆரணி அடுத்த தெள்ளுர் ஊராட்சிக்கபட்ட செய்யாற்றில் ஆரணி அ.தி.மு.க.வினர் மாவட்ட ஆவின் சங்க துணை தலைவர் பாரிபாபு தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இந்த தடுப்பணையால் இந்த பகுதியில் உள்ள ஆரணி, சேத்துபட்டு உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் நீர் ஆதாரம் பெரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சேகர், வேலு, மவட்ட பாசறை செயலாளர் கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் கோவிந்தராசன், பூங்கொடி, திருமால், மேற்கு ஆரணி பெருந்தலைவர் பச்சியம்மாள், சீனிவாசன், வழக்கறிஞர் சங்கர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News