செய்திகள்
கைது

குமரியில் ஊரடங்கு உத்தரவு மீறல்: கடந்த 64 நாட்களில் 7,952 வழக்குகள் பதிவு

Published On 2020-05-28 13:04 GMT   |   Update On 2020-05-28 13:05 GMT
குமரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 64 நாட்களில் 7 ஆயிரத்து 952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,440 பேர் கைதாகி உள்ளனர்.
நாகர்கோவில்:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக நடந்து செல்கின்றனர்.

அவ்வாறு கூட்டம் போடாமல் இருக்கவும், தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிபவர்களை கண்டறியவும் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஊரடங்கை மீறியதாக குமரி மாவட்டத்தில் கடந்த 64 நாட்களில் 7 ஆயிரத்து 952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 440 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 5 ஆயிரத்து 913 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News