செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2020-05-27 02:50 GMT   |   Update On 2020-05-27 02:50 GMT
இலங்கை மந்திரியும், தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

இலங்கையின் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி துறை மந்திரியும், தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகன் தொண்டமான் மறைவு தாங்க முடியாத துயரத்தையும் அதிர்ச்சியையும் தந்ததாகவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இதேபோல் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News