செய்திகள்
பிளாஸ்மா சிகிச்சை - கோப்புப்படம்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையில் முன்னேற்றம்

Published On 2020-05-24 13:11 GMT   |   Update On 2020-05-24 13:11 GMT
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொண்டதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கச் செய்து குணப்படுத்தி வருகிறார்கள்.

சத்தான உணவுகளை வழங்கியும், கபசுர குடிநீர் கொடுத்தும் மேலும் சில காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து மாத்திரைகளையும் வழங்கி வருகின்றனர்.

இதில் நல்ல உடல்நிலை உடையவர்கள் எளிதில் குணமடைந்து விடுகின்றனர். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதித்தவர்களும், வயதானவர்களும் குணமடைவதில் சிரமம் உள்ளது.



எனவே இவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை மேற்கொள்ள மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கேட்டு இருந்தது. அதற்கு மத்திய அரசும் அனுமதி கொடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளில் குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து பிளாஸ்மா சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவரின் ரத்தத்தை பிரித்து எடுத்து அதை மற்றொரு கொரோனா நோயாளிக்கு ரத்தத்தை செலுத்தினால் அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே அதிகரித்துவிடும்.

கேரளாவில் இதே நடைமுறையை பின்பற்றி நிறைய நோயாளிகளை காப்பாற்றி உள்ளனர். அதேபோல் இப்போது தமிழகத்திலும் இந்த சிகிச்சை முறை தொடங்கப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் 8 பேரிடம் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து சிகிச்சை மேற்கொண்டதில் கொரோனா நோயாளியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News