செய்திகள்
மரக்காணத்தில் சாய்ந்து கிடக்கும் தென்னை மரம்.

அம்பன் புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன

Published On 2020-05-22 14:37 GMT   |   Update On 2020-05-22 14:37 GMT
அம்பன் புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றால் தென்னை, பனை, ஆலமரம் போன்றவை வேரோடு சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மரக்காணம்:

மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் அடிக்கடி மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் வங்க கடலில் உருவான அம்பன் புயல் நேற்று முன்தினம் ஒடிசா, மேற்கு வங்க பகுதிகளில் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்தபோது தமிழக கடலோர பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. அதன்படி மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் ஏரிமேடு, ஊரணி, பாலக்காடு, கவுப்பாக்கம், ஆத்திக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் தென்னை, பனை, ஆலமரம் போன்றவை வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News