செய்திகள்
வாட்ஸ்அப்

தஞ்சை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வாட்ஸ்-அப் குழு: கலெக்டர்

Published On 2020-05-22 10:45 GMT   |   Update On 2020-05-22 10:45 GMT
தஞ்சை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வாட்ஸ்-அப் குழு உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் பேசினார்.
தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் கோவிந்தராவ் பேசியதாவது:-

கோடை காலத்தில் ஊரகம், நகர்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். இதற்காக குடிநீர் ஆதாரங்களில் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்கி அதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஜல் ஜூவன் மி‌ஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் தனி நபர் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. தடையில்லா மின்சாரம் வழங்குவதை கண்காணிக்க உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மூலம் மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரை கொண்ட வாட்ஸ்அப் குழு உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News