செய்திகள்
அரிசி

சேலம் சாஸ்தா நகரில் 1,500 பேருக்கு நிவாரண உதவி

Published On 2020-05-18 10:22 GMT   |   Update On 2020-05-18 10:22 GMT
சேலம் சாஸ்தா நகரில் 1,500 ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அய்யப்பன் கோவில் அருகில் நடந்தது.
சேலம்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வருமானம் இல்லாமல் தவித்து வரும் ஏழை மக்களுக்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், சேலம் ஜாகீ ர் அம்மாபாளையம் சாஸ்தா நகர் மனை நில சொந்தக்காரர்கள் சங்கம் சார்பில் 1,500 ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அய்யப்பன் கோவில் அருகில் நடந்தது.

சாஸ்தா நகர் ஸ்தாபகர் பாலசுந்தரம் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடை பிடித்து நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் பாலு, முன்னாள் கவுன்சிலர் அசோக்குமார், சாஸ்தா நகர் மனை நில சொந்தக்காரர்கள் சங்க தலைவர் ராஜா மற்றும் ஜெயக்குமார், சரவணன், மீனாட்சி சுந்தரம், பழனி, முனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News