செய்திகள்
பாய்மரப்படகுகள்

பாம்பனில் 10 நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் பாய்மரப்படகுகள்

Published On 2020-05-15 15:03 GMT   |   Update On 2020-05-15 15:03 GMT
தூக்குப்பாலம் திறக்கப்படாததால் பாம்பனில் 10 நாட்களுக்கு மேலாக பாய்மரப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்:

லட்சத்தீவில் இருந்து கடலூர் துறைமுகம் செல்வதற்காக பாய்மரப்படகு ஒன்று புறப்பட்டு வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக கடந்த 2-ந் தேதி, குந்துகால் அருகே உள்ள தென் கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த பாய்மரப்படகில் 10 பேர் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரையிலும் தூக்குப்பாலம் திறக்கப்படாததால் கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே பாய்மரப்படகிலேயே அவர்கள் தவித்து வருகின்றனர். இதே போல் லட்சத்தீவில் இருந்து கடலூர் செல்ல வந்த மற்றொரு பாய்மரப்படகு ஒன்றும் பாம்பன் பகுதிக்கு வந்து, ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாய்மரப் படகோடு சேர்த்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தூக்குப்பாலம் திறக்கப்படலாம் எனவும், அதன் பின்னரே அந்த 2 பாய்மரப்படகும் கடலூருக்கு புறப்படும் எனவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News