செய்திகள்
கறிக்கோழி

உற்பத்தி குறைந்ததால் கறிக்கோழி கொள்முதல் விலை அதிரடி உயர்வு

Published On 2020-05-15 14:27 GMT   |   Update On 2020-05-15 14:27 GMT
இந்தியா முழுவதும் 50 சதவீதம் உற்பத்தி குறைந்ததால் கறிக்கோழி சில்லரை விலையில் கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல்:

தமிழகத்தில், 25 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப் புக்குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது, கிலோ 128 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நுகர்வு சரிந்ததால் கறிக் கோழி உற்பத்தியை குறைத்துள்ளனர். வாரம் ஒரு கோடி கோழி உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது 50 லட்சம் கோழிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. வழக்கமாக,  ஒரு கோழி எடை 2 கிலோ இருக்கும் நிலையில் தற்போது 2 கிலோ மட்டுமே உள்ளது. தற்போது விலை இருப்பதால் 45 முதல் 48 நாட்களில் பிடிக்க வேண்டிய கோழியை 35 நாட்களில் பிடிக்கின்றனர். 

இந்தியா முழுவதும் 50 சதவீதம் கோழி உற்பத்தி குறைந்துள்ளது. கறிக்கோழி வரலாற்றில் முதன் முறையாக கொள்முதல் விலை 128 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கோழிக்கு, உற்பத்தி செலவாக 110 ரூபாய் ஆகிறது. இந்த நிலை தொடர்ந்து 6 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும். சில்லரை விலையில் கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News