செய்திகள்
பெட்ரோல் டீசல்

பெட்ரோல், டீசல் விலை மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

Published On 2020-05-08 12:55 GMT   |   Update On 2020-05-08 12:55 GMT
பெட்ரோல், டீசல் விலை மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும் என்று கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை:

கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகள் இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கால் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே அத்தியாவசிய பணிக்காக இயக்கப்படுகிறது. அதிலும் சோதனை சாவடிகளில் கொரோனா தொற்று சோதனையில் 30 ஆயிரம் லாரிகள் இயக்கத்தடையில் உள்ளது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஆனால் தமிழக அரசு பெட்ரோல் விலையில் ரூ.3.25-ம், டீசல் விலையில் ரூ.2.50-ம் மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையை மறுபரிசீலனை செய்து குறைக்க நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News