செய்திகள்
அரசு பேருந்துகள்

ஊரடங்கிற்கு பிறகு 50 சதவீத பேருந்துகளை இயக்க தயாராக இருக்க வேண்டும்- முதன்மை செயலாளர் சுற்றறிக்கை

Published On 2020-05-07 06:23 GMT   |   Update On 2020-05-07 06:23 GMT
ஊரடங்கிற்கு பிறகு 50 சதவீத பேருந்துகளை இயக்க போக்குவரத்துக்கழகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என போக்குவரத்து முதன்மை செயலாளர் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சாலை போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில் விரைவில் பொது போக்குவரத்து தொடங்கப்படலாம் என சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்

இதையடுத்து தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

• தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும்.

• ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசர் ஆகியவை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

• ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட வேண்டும்.

• ஒவ்வொரு முறை பயணத்தின் போது ஓட்டுநர் தன்னுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.

• ஓட்டுநர் இருக்கை திரை கொண்டு மூடப்பட வேண்டும்.

• பயணிகளுக்கும் ஓட்டுநருக்கும் உள்ள இடைவெளியை கடைபிடிக்க  வேண்டும்.

• ஓட்டுநர் முகக்கவசம், கையுறை அணிந்திருத்தல் வேண்டும்.

• ஊரடங்கு முடிந்த பிறகு அரசுப் பேருந்துகளில் பயணிகள் அமர இருக்கைகளில் மார்க் செய்ய வேண்டும்.

• பயணிகள் சம இடைவெளி கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

• ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் பேருந்துகள் முழுமையாக கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்திட வேண்டும்.

• ஏசி ரக சொகுசு பேருந்துகள் இயக்கத்தை பயன்படுத்த வேண்டாம்.

• முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி.

• வரிசையில் நின்று பேருந்தில் ஏற வேண்டும்.

• கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் ஆன்லைனில் கட்டணம் செலுத்த ஏற்பாடு.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 
Tags:    

Similar News